Skip to the content

திரு பொன்னம்பலம் கணேசலிங்கம்

 

திரு பொன்னம்பலம் கணேசலிங்கம் அவர்கள் 29/06/2019 இயற்கை எய்தினார் அமரர் கணேசலிங்கம் அவர்கள் யாழ் மத்திய கல்லூரியின் புகழ்குரிய மாணவர்.மற்றும் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரித்தானிய கிளையின் ஆரம்ப கால உறுப்பினரும் ஆவர். நீண்ட காலம் வதித்த நியூமோல்டன்/சேர்பிற்றன் பகுதியில் விளையாட்டிலும் கல்வியிலும் தொடர்பு கொண்ட பல்வேறு நிறுவனங்களின் முக்கிய பங்கு வகித்தார். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பன்னிரண்டு நண்பர்களுடன் இனைந்து தொடங்கியதே யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் (JSSA UK) அதன் முதலாவது தலைவராக கடமையாற்றி. அதனை நீண்டகாலம் நிலைத்து நின்று எமது எதிர்காலச் சந்ததியினருக்கு பயனுள்ளதாகக் கூடியதாக பழையமாணவர் சங்களிடம் கையளித்த நிகழ்வு நீண்ட காலத்துக்கு திரு கணேசலிங்கத்தின் அவர்களின் பெயர் செல்லி நிற்கும்.

அன்னாரின் இழப்பால் துயர் அடைந்து இருக்கும் குடும்பத்துக்கு JCCOBA UK சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்ளுகிறோம்.

comments powered by Disqus